வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு: தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது இதற்காக தற்காலிகமாக சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த உள்ஒதுக்கீடு இருக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் நாடு மக்கள் கட்சி என்ற அமைப்பின் சார்பில் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்காமல், எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது? என தெரியவில்லை. இதன் மூலம் எம்.பி.சி பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்றும், இதனால், 22 சாதிப்பிரிவினர் பாதிக்கப்படுவார் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும், தற்காலிக சட்டத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாதென தென் நாடு மக்கள் கட்சி தமது மனுவில் குறிப்பிட்டுள்ளது. . இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

More News >>