திருப்பதி கோவிலுக்கு வந்த 6 வயது சத்தீஸ்கர் சிறுவன் கடத்தல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளான். நான்கு நாட்களாகியும் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சி.சி. டி.வி. கேமிரா காட்சிகளிம் ஆதாரமாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போலீசார் தீவிர தேடுதல் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய கடந்த 27ஆம் தேதி திருப்பதி வந்தனர். அலிபிரி பேருந்து நிலையம் அருகே இலவச தரிசன டிக்கெட் பெற அவர்கள் காத்திருந்தனர். அப்போது பக்தர்கள் கூட்டத்தில் சிவம்குமார் சாகு என்ற 6 வயது காணமல் போனான்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் போலீசாருக்கு தகவல் பட்டது. இதையடுத்து நகரில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கடந்த இரு தினங்களாக ஆய்வு செய்தனர். இதில் 50 வயது மதிக்கதக்க ஒருவர் சிறுவனை அழைத்து செல்வது பதிவாகி உள்ளது. இதையடுத்து சி.சி. டி.வி.கேமிரா காட்சிகளை ஆதாரமாககொண்டு அலிபிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணமல் போன சிறுவனை கண்டு பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

More News >>