விளம்பரம் செய்கின்ற அரசியல் கட்சிகள் மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை

மன்னர்குடி பகுதிகளில் தேர்தல் விதிமுறையை மீறி விளம்பரம் செய்கின்ற அரசியல் கட்சிகள் மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான விதிமுறைகளும் அமலில் இருந்து வருகின்றது.விதியை மீறி செயல்படும் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலையோரம் நாம் தமிழர் கட்சி சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அக்கட்சியை சேர்ந்த ராம அரவிந்தன் என்பவர் மீதும் திருமக்கோட்டை அருகே அதிமுக சார்பில் பிளக்ஸ்பேனர் வைத்ததிற்காக போஸ் ராஜன் என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More News >>