சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..
ஆத்தூர் மற்றும் அதைச் சுற்றி பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விலை பாதியாக குறைந்துள்ளதால் இல்லத்தரிசிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். தமிழக உணவுகளில் சின்ன வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாம்பார் முதல் அசைவ உணவுகள் வரை சின்ன வெங்காயம் முக்கிய பொருளாக கருதப்படுகிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு 1 கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையானது.
வெங்காயம் வாங்குவது தங்கத்தை வாங்குவது போல் இருந்ததால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு வெங்காயத்தை பரிசாக கொடுத்த நிகழ்வுகளும் உண்டு. இதனிடையே ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்றைய நிலவரப்படி சின்ன வெங்காயத்தின் விலை பாதியாக குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.