அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு வேறுபட்ட தீர்ப்பால் குழப்பம்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2013ம் ஆண்டு வரை தமிழக பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திரபாலாஜி அமைச்சர் பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சென்னை ஐகோர்ட்டில் மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சத்திய நாராயணன், நீதிபதி ஹேமலதா ஐவர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி சத்திய நாராயணன், அமைச்சர் மீது வழக்குபதிவு செய்து ஆளுநரிடம் உரிய ஒப்புதல் பெற்று விசாரிக்க வேண்டும் என்றும், நீதிபதி ஹேமலதா, இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று தீர்ப்பளித்திருக்கிறார். இருநீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை அளித்திருப்பதால் வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

More News >>