தேர்தல் புகாருக்கு தனி செயலி அறிமுகம்..
இந்திய தேர்தல் ஆணையம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள C -VIGIL (citizen VIGIL) என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை தேவைப்படுபவர்கள் பதிவிறக்கம் செய்து தங்களது ஸ்மார்ட் போனில் வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்த பணம் வழங்குதல், பொருட்கள் வழங்குதல், அனுமதி இன்றி சுவர் விளம்பரம் செய்தல் உள்ளிட்ட ஏதேனும் விதிமீறல்களை தாங்கள் பார்வையிட்டால் அதனை இந்த செயலியில் உள்ள பொத்தானை அழுத்தி பொட்டோவாகவோ அல்லது வீடியோவாகவோ நேரடியாக பதிவு செய்து செயலியில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
இப்படி பதிவு செய்யும் புகார் தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர், சட்டமன்ற தொகுதிகளுகான தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு புகார் தெரிவித்த இடத்தின் ழுமுவிவரத்தோடு வந்து சேரும். அந்த புகார் சம்மந்தப்பட்ட பகுதியின் பறக்குபடையினருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்று புகாரின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே தங்களது செல்பேசி எண்ணை பதிவு செய்திருந்தால் சம்மந்தப்பட்ட நபருக்கு தீர்வு அவரது ஸ்மார்ட் போனிலேயே வந்து சேரும் பதில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.