குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை

1100 nits பிரைட்னஸ் உடன் AMOLED டிஸ்ப்ளே கொண்ட ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இது அறிமுகமாகியுள்ளது.ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:சிம்: இரட்டை நானோ சிம்தொடுதிரை: 6.43 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்)இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபிசேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டிகார்டு மூலம் உயர்த்தலாம்)

செல்ஃபி காமிரா: 13 எம்பி ஆற்றல்குவாட் காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் (சோனி ஐஎம்எஸ்582 சென்ஸார், அல்ட்ராவைடு ஆங்கிள் ஷூட்டர், மாக்ரோ ஷூட்டர், டெப்த் சென்ஸார் கொண்டவை)பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 678 SoCஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; எம்ஐயூஐ 12மின்கலம்: 5000 mAhசார்ஜிங்: 33W ஃபாஸ்ட் சார்ஜிங்4ஜி, VoLTE, வைஃபை, புளூடூத் வி5.0, அகச்சிவப்பு (ஐஆர்) வசதி கொண்ட ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி சாதனம் ரூ.11,999/- விலையிலும் 6 ஜிபி +128 ஜிபி சாதனம் ரூ.13,999/- விலையிலும் மார்ச் 16ம் தேதி முதல் கிடைக்கும். அமேசான், மி.காம், மி ஹோம் ஸ்டோர்களில் இதை வாங்கலாம்.

More News >>