பணிந்தது பாஜக.. புதுவை ரங்கசாமி உற்சாகம்
புதுச்சேரி சட்டபேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ரங்கசாமி வலியுறுத்தினார். இதற்கு பாஜக மேலிடம் சம்மதிக்கவில்லை. இதனால் கூட்டணியில் இருந்து விலகி, என் ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட ரங்கசாமி முடிவு எடுத்து அதற்கான வேலைகளில் இறங்கினார். 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ரங்கசாமி செய்தார். ரங்கசாமி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் தோல்விதான் என்று சர்வே மூலம் பாஜகவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாஜக மேலிடம், ரங்கசாமியிடம் சமரசம் பேச முயன்றது. இதற்கு ரங்கசாமி பிடி கொடுக்கவில்லை. இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, உங்களுக்கு தேவையானவை செய்து கொடுக்கப்படும்.
கோரிக்கைகள் நிறைவேற்றபடும். எனவே கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று ரங்கசாமிக்கு வீடியோ கால் மூலம் அழுத்தம் கொடுத்தார். இந்த நிலையில் பாஜக மேலிட தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதையடுத்து கூட்டணி கட்சி முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிப்பது, அவர் கேட்ட 17 தொகுதிகளை ஒதுக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து ரங்கசாமியிடம் தெரிவிக்கபட்டது. இதையடுத்து கூட்டணியில் சேர ரங்கசாமி முடிவு எடுத்து உள்ளார். கூட்டணி தொகுதிகள் இறுதியானது-என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16, பாஜக 9, அதிமுக 4, பாமக 1 தொகுதியில் போட்டியிடுகிறது; 11 மணிக்கு ரங்கசாமி அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.
இதையடுத்து கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பாஜக மேலிட தலைவர்கள், என் ஆர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள்(ஒரு நியமன எம்எல்ஏ பதவி), பாஜகவுக்கு 9 இடங்கள்(ஒரு நியமன எம்எல்ஏ பதவி) அதிமுகவுக்கு 4 இடங்கள்(ஒரு எம்எல்ஏ பதவி) பாமக வுக்கு 1 இடங்கள் ஒதுக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையில் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, என் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 5 பேர், காங்கிரஸ் மற்றும் திமுகவில் இணைய உள்ளனர்.