கொரோனா பாதிப்பு நிவாரண நிதி ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அறிவித்தது இந்திய அரசு எந்த அமெரிக்க அரசு. உலகிலேயே அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. அங்கு அதிபராக இருந்த ட்ரம்ப் தோல்வி அடைந்து ஜோ பைடன்.சமீபத்தில் அதிபராக பதவியேற்று கொண்டார். பதவி ஏற்றதும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ஜோ பைடன். அதாவது, கொரோனா நிவாரண நிதியாக ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

ஜோ பைடனின் அறிவிப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றி பெற்றது. எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செனட் சபை தெரிவித்தது. எனவே கொரோனா நிவாரண நிதியாக ஒரு லட்ச ரூபாய் விரைவில் கொரோனா பாதிப்புக்குள்ளான அமெரிக்கர்களின் வங்கிக் கணக்கில் விரைவில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News >>