இது என்ன தமிழ்நாடா? - மத்திய அரசிடம் சீறிய சந்திரபாபு நாயுடு
தமிழகத்தை போல் ஆந்திரத்தையும் கட்டுப்படுத்தி விட முடியும் என மத்திய அரசு நினைக்கிறது; ஆனால், ஆந்திரா ஒன்றும் தமிழ்நாடு அல்ல என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்திராகாந்தி மைதானத்தில் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்.
“நீதிக்கான போராட்டம்’’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த உண்ணாவிரதத்தில் தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் பங்கேற்றனர். இந்நிலையில் தனது போராட்டம் குறித்து, சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, “மாநில நலனை மத்திய அரசுக்காக எப்போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தமிழகத்தை போல ஆந்திரத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. ஆனால், அதை எப்போதும் நடத்த விடமாட்டேன்” என்றும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com