வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
ஓராண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாக்களுடன் புதிய ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை வோடஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. லைவ் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல், இந்திய திரைப்படங்கள், டிஸ்னி+ படங்கள் மற்றும் ஸ்டார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த சந்தாதாரர்கள் காணலாம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தா மாதத்திற்கு ரூ.399/- ஆகும். ரூ.401, ரூ.501, ரூ.601, ரூ.801 ஆகிய ப்ரீபெய்ட் சந்தாக்களையும் வோடஃபோன் ஐடியா அறிவித்துள்ளது. ரூ.401 சந்தா 28 நாள்களுக்கானது. இதற்கு அளவில்லா அழைப்புகள், நாளுக்கு 100 குறுஞ்செய்திகள் (எஸ்எம்எஸ்), தினசரி 3 ஜிபி டேட்டா, 100 ஜிபிக்கு 16 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ரூ.501 ரீசார்ஜ்ஜுக்கு 56 நாள்களுக்கு 75 ஜிபி டேட்டா உண்டு.
ரூ.601 ரீசார்ஜ்ஜுக்கு அளவில்லா அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள், தினசரி 3 ஜிபி டேட்டா ஆகியவை 56 நாள்களுக்கு வழங்கப்படும். மொத்தத்தில் 200 ஜிபி டேட்டாவுக்காக கூடுதலாக 32 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.801 ரீசார்ஜ்ஜுக்கு அளவில்லா அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள், 84 நாள்களுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 300 ஜிபி டேட்டாவுக்காக 48 ஜிபி கூடுதலாக கொடுக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியை தரவிறக்கம் செய்து தங்கள் வோடஃபோன் ஐடியா எண்ணைக்கொண்டு லாக்இன் செய்யலாம். வோடஃபோன் ஐடியா இணையதளத்திலும் ரீசார்ஜ் செய்யலாம். ரூ.499/- க்கு மேல் தொகை கொண்ட அனைத்து வோடஃபோன் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்களுக்கும் இச்சலுகை உண்டு.