48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்

மார்ச் 8ம் தேதி ஆப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் மாதம் 17ம் தேதி தொடங்க உள்ளது. குவாட் காமிரா கொண்டுள்ள ஆப்போ எஃப்19 போனின் முதன்மை காமிரா 48 எம்பி ஆற்றல் கொண்டதாகும்.

ஆப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:சிம்: இரட்டை நானோ சிம்தொடுதிரை: 6.40 அங்குலம்; 1080X2400 பிக்ஸல்இயக்கவேகம்: 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி மற்றும் 256 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் உயர்த்தப்படக்கூடியது)செல்ஃபி காமிரா: 16 எம்பி ஆற்றல்குவாட் காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல்பிராசஸர்: ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; கலர்ஸ்ஓஎஸ் 11.1மின்கலம்: 4310 mAhசார்ஜிங்: 30Wவைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி5.10, யூஎஸ்பி டைப்-சி, 3 ஜி மற்றும் 4 ஜி, பிராக்ஸிமிட்டி சென்சார், டிஸ்ப்ளேயில் விரல்ரேகை உணரி ஆகியவை உள்ளன.8 ஜிபி + 128 ஜிபி ஆப்போ எஃப்19 ப்ரோ போன் ரூ.21,490/- விலையில் மார்ச் மாதம் 17ம் தேதி முதலும், 8 ஜிபி + 256 ஜிபி வகை ரூ.23,490/- விலையில் மார்ச் 25ம் தேதி முதலும் விற்பனையாக உள்ளது.

More News >>