பிரபல பாடகர் மீது பீர் பாட்டில் வீச்சு?? என்ன நடந்தது??
தமிழ் பின்னணி பாடகர்களுள் குறுகிய காலத்தில் மக்களை தனது இனிமையான குரல் மூலம் கவர்ந்தவர் சித் ஸ்ரீராம். இவர் பாடிய கண்ணானே கண்ணே, தள்ளி போகாதே உள்ளிட்ட பாடல்கள் எதிர்பார்க்காததை விட புதிய உச்சத்தை அடைந்தது.ஐதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இவரை பாடல் நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தனர். கொரோனா காலம் என்பதால் இந்நிகழ்ச்சியில் 500 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற கண்டிஷன் இருந்தாலும் ஓட்டலின் உரிமையாளர்கள் அத்துமீறி பலரை அனுமதித்துள்ளனர்.
நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் வேளையில் சிலர் திடீரென்று சித் ஸ்ரீராம் மேல் பீர் பாட்டில் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசியுள்ளனர்.இதனால் கோபமடைந்த பாடகர் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிவிட்டார். ரசிகர்கள் தன்னை அசிங்கப்படுத்தினாலும் அவர்களில் மேல் இதுவரை எந்த வித புகாரும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.