முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியின் புதிய அவதாரம்..
முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கலக்கி வருகின்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஸ்டைலுக்கு பல ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. அவரின் கம்பிரமான தோற்றம் வசீகர மிக்க சிரிப்பு பல பெண் ரசிகர்களை ஈர்த்துள்ளது என கூறலாம். அந்த வகையில் தற்போதும் தோனியின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. அதில் தோனி துறவி போல ஆடை அணிந்து, மொட்டை அடித்து கொண்டு ஒன்னும் தெரியாதவர் போல அமர்ந்திருக்கிறார்.
மேலும் அந்தப் பதிவில் தோனியின் இந்தப் புதிய அவதாரம் இணையத்தை அதகளப்படுத்தி வருகிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்” என்று கேள்வி எழுப்பி இருந்தது. தற்போது தோனி 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்க, சென்னை சேப்பாக்காத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படங்களும் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது