பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுமா? குழம்பும் அதிகாரிகள்..
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பள்ளிக்கல்வியை முற்றிலும் புரட்டி போட்டது. மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் கல்வி கற்றனர். கொரோனா தொற்று குறைந்ததையடுத்து படி படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9 மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பிறகு அரசாங்கம் 9 முதல் பிளஸ் 1 வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.
பின்னர் மே 3ஆம் தேதி முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்த தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. ஒருபக்கம் தேர்தல் வேலைகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 2ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகின்றன. இந்த பணிகள் பெரும்பாலும் பள்ளிகளில் தான் நடைபெறும் என்பதால் அனைத்து பள்ளிகளிலும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை விட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. எனவே வரும் 22ஆம் தேதி முதல் பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் பருவத் தேர்வுகளை நடத்தி முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.