108 எம்பி காமிரா: ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் விற்பனை ஆரம்பம்
ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை விட சற்று மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டதாக ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விற்பனை இந்தியாவில் இன்று (மார்ச் 18) நண்பகல் 12 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. மி.காம், அமேசான் தளங்களிலும் மி ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் இதை வாங்கலாம்.
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்சிம்: இரட்டை நானோ சிம்தொடுதிரை: 6.67 அங்குலம் எஃப்எச்டி+ சூப்பர் AMOLEDபிரைட்னஸ்: 1200 nitsஇயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபிசேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (512 ஜிபி வரை கூட்டக்கூடிய வசதி)செல்ஃபி காமிரா: 16 எம்பிபின்புற காமிரா: 108 எம்பி (சாம்சங் எச்எம்2) + 5 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பிராசஸர்: ஆக்டா-கோர் ஸ்நாப்டிராகன் 732pஜி SoCஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 எம்ஐயூஐ 12மின்கலம்: 5020 mAhசார்ஜிங்: 33 W ஃபாஸ்ட் சார்ஜிங்
4ஜி VoLTE, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், இன்ஃப்ரா ரெட், யூஎஸ்பி டைப்-சி போன்ற வசதிகள் கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸில் 6 ஜிபி + 64 ஜிபி சாதனம் ரூ.18,999/- விலையிலும் 6 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.19,999/- விலையிலும் 8 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.21,999/- விலையிலும் கிடைக்கும்.