விஜே சித்ரா தற்கொலையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்..
விஜே சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல தரப்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டாலும் இவரது மரணத்தில் பல மர்ம முட்சிகள் அவிழ்க்க முடியாத நிலையிலே உள்ளது. இந்நிலையில் இவருக்கு நியாயம் கேட்டு ரசிகர்கள் போராடி வருகின்றனர்.
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் தற்கொலைக்கான காரணங்கள் வெளிப்படையாக கூறப்படுவதில்லை. அதுபோல தான் சித்ராவின் வழக்கிலும் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சித்ராவின் பெற்றோர்கள் அவர் தற்கொலை செய்து கொண்ட ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அந்த ரூமில் இருக்கும் ஃபேனை பிடித்து இழுத்தபடி சித்ரா வந்திடு என்று கதறி கதறி அழுதனர்.