நான் ரொம்ப பிஸி.. பட வாய்ப்பு மழையில் நனையும் வனிதா அக்கா..

என்னதான் பல முறை தோர்த்தாலும் மீண்டும் எழுந்து கெத்தாக நிற்பதற்கு ஒரு மனதைரியம் தேவை அது நம்ப வனிதா விஜயகுமாரிடம் அதிகமாகவே உள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பல ரசிகர்களின் ஆதரவை சம்பாதித்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக் ஆக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெற்றார்.

இதன் பிறகு இந்தி படமான அந்தகன் திரைப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளது. இப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரசாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.அதற்கு வனிதா மனமார்ந்த பாராட்டுகள் பிரசாந்த்.தானும் படப்பிடிப்பிகளில் கலந்து கொள்ள காத்துகொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.இதனால் ரசிகர்கள் அந்தகன் படத்தில் உங்களின் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்கள் என்று சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.

More News >>