ராமாபுரம் டிஎல்எப் அருகே லாரி கவிழ்ந்து விபத்து #Breaking
ராமாபுரம் டிஎல்எப் அருகே மணல் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, ராமாபுரம் டிஎல்எப் அருகே இன்று அதிகாலை மணல் ஏற்றிக்கொண்டு டிம்பர் லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி கவிழ்ந்து நடுரோட்டிற்கு வந்தாதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com