வழக்குக்கு பயந்து எஸ்.வி.சேகர் தலைமறைவு - கைது செய்ய தனிப்படை அமைப்பு

பெண் பத்திரிகையாளரை அவமறியாதை செய்யும் விதமாக முகநூல் பக்கத்தில் பருத்தை பரிமாறி இருந்த எஸ்.வீ.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக் கும்போது பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டினார். இதுதொடர்பாக வீக் வார இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார். காவல்துறையிலும் புகார் அளித்தார்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் இழிவான கருத்துகளை வெளியிட்டார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் சங்கங்களும் நடிகர் எஸ்.வி.சேகருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்த போதும் அவர் பார்வேர்டு செய்த தகவல் மிகவும் கடுமையானது. எனவே தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் பத்திரிகையாளர்கள் காவல்துறையில் புகார் செய்தனர்.

சென்னை மற்றும் மதுரை, கோவை ஆணையர் அலுவலகத்திலும் பத்திரிகைகயாளர்கள் மற்றும் மாதர் சங்கத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர்எஸ்.வி.சேகர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் தலைமறைவு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தலைமறைவான எஸ்.வீ.சேகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>