ரியல்மீ 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்: இன்று முதல் விற்பனை

ரியல்மீ 8 வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரியல்மீ 8 மற்றும் ரியல்மீ 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மார்ச் 25 நண்பகல் 12 மணி முதல் ரியல்மீ.காம் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய தளங்களில் ஆரம்பிக்கிறது. விற்பனை தொடங்கும் நாளன்று ஐசிஐசிஐ கிரடிட் கார்டு மூலம் வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மீ 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

தொடுதிரை: 6.4 அங்குலம் சூப்பர் AMOLED எஃப்எச்டி+இயக்கவேகம்: 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபிசெல்ஃபி காமிரா: 16 எம்பி பஞ்ச் ஹோல்பின்புற காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (கறுப்பு/வெள்ளை) (குவாட் காமிரா)பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ ஜி95; ஏஆர்எம் மாலி-ஜி76மின்கலம்: 5000 mAhசார்ஜர்: 30W டார்ட் சார்ஜ்

4 ஜிபி + 128 ஜிபி ரியல்மீ 8 ஸ்மார்ட்போன் ரூ.14,999/- விலையிலும், 6 ஜிபி + 128 ஜிபி ரியல்மீ 8 ஸ்மார்ட்போன் ரூ.15,999/- விலையிலும், 8 ஜிபி + 128 ஜிபி ரியல்மீ 8 ஸ்மார்ட்போன் ரூ.16,999/- விலையிலும் கிடைக்கும்.

ரியல்மீ 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

தொடுதிரை: 6.4 அங்குலம் சூப்பர் AMOLED எஃப்எச்டி+இயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபிசெல்ஃபி காமிரா: 16 எம்பி பின்புற காமிரா: 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (கறுப்பு/வெள்ளை) (குவாட் காமிரா)பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 720 ஜி SoCமின்கலம்: 4500 mAhசார்ஜர்: 50W டார்ட் சார்ஜ்

6 ஜிபி + 128 ஜிபி ரியல்மீ 8 ப்ரோ போன் ரூ.17,999/- விலையிலும், 8 ஜிபி + 128 ஜிபி ரியல்மீ 8 ப்ரோ போன் ரூ.19,999/- விலையிலும் கிடைக்கும்.

More News >>