ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும் - பாஜகவுக்கு அடுத்த சிக்கல்
யஷ்வந்த் சின்ஹாவைத் தொடர்ந்து, சத்ருகன் சின்ஹாவுக்கும் பாஜகவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளார்.
பாஜக-வில் மூத்த தலைவரான அத்வானியை புறந்தள்ளி விட்டு, மோடி பிரதமர் ஆனதிலிருந்தே அக்கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, நடிகர் சத்ருகன் சின்ஹா எம்.பி. ஆகியோர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அண்மையில் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டபோது, மோடிக்கு எதிராக பகிரங்கமாக தங்களின் கருத்தை வெளியிட்டனர்.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹா பாஜக-வில் இருந்து விலகுவதாக சனிக்கிழமையன்று அறிவித்தார். அவர் கட்சியை விட்டு போக வேண்டியவர்தான் என்று பாஜக-வும் கூறிவிட்டது. இந்நிலையில் நடிகர் சத்ருகன் சின்கா பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து இருப்பதுடன் கட்சிக்குசவால் விடுத்து பேசி உள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், “நியூட்டனின் 3-வது விதியின்படி ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்கும் என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அலிபாபா மற்றும் 40 திருடர்களின் அரசு” என்பதை மக்கள் தெரிந்து வருகின்றனர். முடிந்தால் அவர்கள் என் மீது நடவடிக்கை எடுத்து பார்க்கட்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com