வீட்டில் கழிப்பறை இல்லையா? அப்போ சம்பளம் கட்: ஜம்மு கஷ்மீர் அரசு அதிரடி

வீட்டில் கழிப்பறை இல்லாத அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைத்து ஜம்மு காஷ்மீர் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறன்றன. பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை 71 சதவீத வீடுகளுக்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. இதனால், ஸ்வச் பாரத்திட்டதின் கீழ் திறந்தவெளி கழிப்பறை பயன்படுத்துவது குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் துணை ஆணையர் அனில் குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், கிஸ்த்துவார் மாவட்டத்தில் பணியாற்றும் 616 அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை இல்லை என்பது குறித்து தெரியவந்தது.

இதனால், ஜம்மு காஷ்மீர் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து அறிவித்துள்ளது. இதில், “அரசு ஊழியராக இருந்து கொண்டு அரசின் விடுமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பது வெட்கக்கேடான ஒன்று. வீடுகளில் கழிப்பறை கட்டாமல் இருக்கும் 616 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது” என மாவட்ட மேம்பாட்டு ஆணையர் அதிரடி ஆணையை அறிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>