48 எம்பி முதன்மை காமிரா: ரெட்மி நோட் 10 இன்று விற்பனை ஆரம்பம்

ரெட்மி நோட் 10 வரிசையில் பட்ஜெட் போன் என்று அறியப்படும் நோட் 10 ஸ்மார்ட்போன் இன்று (மார்ச் 30) நண்பகல் முதல் அமேசான் மற்றும் மி.காம் தளங்களிலும் மி ஹோம் விற்பனையகங்களிலும் விற்பனையாகிறது.

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

சிம்: இரட்டை நானோ சிம்தொடுதிரை: 6.43 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல் தரம்); சூப்பர் AMOLEDபிரைட்னஸ்: 1000 nitsஇயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபிசேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (512 ஜிபி வரை உயர்த்திக்கொள்ளக்கூடியது)செல்ஃபி காமிரா: 13 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி (அல்ட்ரா வைடு ஆங்கிள்) + 2 எம்பி (மேக்ரோ ஷூட்டர்) + 2 எம்பி (டெப்த் சென்ஸார்) (குவாட் காமிரா)பிராசஸர்: ஆக்டோ-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 678 SoCஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; MIUI 12மின்கலம்: 5000 mAhசார்ஜிங்: 33W

4ஜி VoLTE, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், ஐஆர் வசதிகள் கொண்ட ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி சாதனம் ரூ.11,999/- விலையிலும் 6 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.13,999/- விலையிலும் விற்பனையாகிறது.

More News >>