தோனியின் புது லுக்.. போட்டோ வெளியிட்டு கேப்ஷன் பதிவிட்ட சிஎஸ்கே!
சமீபத்தில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஸ்டைலுக்கு பல ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. அவரின் கம்பிரமான தோற்றம் வசீகர மிக்க சிரிப்பு பல பெண் ரசிகர்களை ஈர்த்துள்ளது என கூறலாம். அந்த வகையில் தற்போதும் தோனியின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. அதில் தோனி துறவி போல ஆடை அணிந்து, மொட்டை அடித்து கொண்டு ஒன்னும் தெரியாதவர் போல அமர்ந்திருந்தார்.
தற்போது தோனி 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்க, சென்னை சேப்பாக்காத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படங்களும் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இன்று தோனியின் நியூ லுக் புகைப்படத்தை பதிவிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட் செய்துள்ளது. கேப்டன் தோனியின் புதிய லுக் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவிட்டு Baadshah Of Super Smiles என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியாமல் ப்ளே ஆப் சுற்றிற்கும் முன்னேறாமல் தொடரிலிருந்து வெளியேறியது சென்னை அணி. ஆனால் ஐபிஎல் 2021 சீசன் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வரும் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மோத இருக்கின்றன. கடந்த சீசனில் சென்னை அணியில் இணையாத சுரேஷ் ரெய்னா தற்போது இந்த சீசனில் அந்த அணியில் இணைந்து விளையாடவுள்ளார். இதனால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.