தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரிய தீர்மானத்தை நிராகரித்தார் வெங்கய்யா

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரிய தீர்மானத்தை நிராகரித்தார் வெங்கய்யா

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரிய மனுவை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்யா நாயுடு நிராகரித்துள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி 64 எம்பிக்கள் கையெழுத்திட்ட கண்டன தீர்மானத்திற்கான நோட்டீசை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவிடம் நோட்டீஸ் வழங்கினர்.

இதுதொடர்பாக முடிவு எடுப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், முன்னாள் தலைமை வழக்கறிஞர் கே.பராசரன் உள்ளிட்ட கலந்துக் கொண்டு விவாதித்தனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதியை பதவி நீக்கக்கோரி எதிர்கட்சிகள் அளித்த நோட்டீசை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறுகையில், “தீர்மான விவரங்களை முன்கூட்டியே தெரிவித்தது தவறு. நோட்டீசை அவைத்தலைவர் ஏற்பதற்கு முன் அதிலுள்ள விவரங்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததும் மாநிலங்களவை விதிகளுக்கு எதிரானது. இதனால், சட்ட வல்லுனர்களின் பரிந்துரையை ஏற்று பதவி நீக்க தீர்மானத்திற்கான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது ” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>