மொயீன் அலி வைத்த கோரிக்கை – உடனடியாக நடவடிக்கை எடுத்த சிஎஸ்கே!
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் வருகின்ற 9ம் தேதி தொடங்க இருக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஆர்சிபி மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிக்க்கான அனைவரும்காத்திக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மொயீன் அலி. இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். இந்த சீசனுக்கான (2021) ஏலத்தில் அவரை ஆர்சிபி விடுவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
அதன்படி, இந்தாண்டு ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்கஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அணியும் ஜெர்சியில் SNJ 10000 என்ற விளம்பர லோகோ இடம் பிடித்துள்ளது. இது ஒரு மதுபான விளம்பரமாகும். மொயீன் அலியை பொறுத்தவரை அவர் இஸ்லாம் மதத்தைச்சேர்ந்தவர். இஸ்லாம் மதத்தில் மது அருந்தக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல மது அருந்துவது தொடர்பான, அதை தூண்டும் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் இஸ்லாம் மதம் போதிக்கிறது SNJ 10000 லோகோ மொயீன் அலிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜெர்ஸியை அணிந்து விளையாடுவதை நெருடலாக கருதுவதால் ஜெர்சியில் உள்ள SNJ 10000 லோகோவை நீக்க மொயீன் அலி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது இந்த கோரிக்கையை சிஎஸ்கே நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அதன்படி, அந்த குறிப்பிட்ட விளம்பரத்தை போட்டிக்கான ஜெர்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.