இந்தியாவில் கொரோனா 2வது அலை ஒருநாளில் மட்டும் 96,982 பேர் பாதிப்பு.. மீண்டும் ஊரடங்கா?!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 96,982 பேர் கொரோனா தொற்றறால் பாதிக்கபட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிககப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும், 96,982 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,25,89,067 -லிருந்து 1,26,86,049 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 446 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,65,101 -லிருந்து 1,65,547 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் இதுவரை 8,31,10,926 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. . நேற்று ஒரே நாளில் 43,00,966 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 50,143 பேர் குணமடைந்தனர். நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,88,223 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,82,136 -லிருந்து 1,17,32,279 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று உலகத்தையே உலுக்கிய நிலையில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பரவி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனைக்குபிறகு ஊரடங்கு அல்லகு கட்டுபாடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>