`மாஸ்க் காரணமாக வந்த பிரச்னை.. அஜித் - விஜய் ரசிகர்கள் திடீர் மோதல்
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு இல்லையென்றாலும், அங்கெல்லாம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். படம் வெளியீடு, ஃபர்ஸ்ட் லுக், பாடல், டிரைலர் வெளியீடு அல்லது பிறந்த நாள் என்பதையும் தாண்டி அஜித்தின் சாதாரணமாக வெளியே சென்றால் கூட அந்த நிகழ்வுகளை அவரது ரசிகர்கள் ஹஸ்டேக் உருவாக்கி, அதை இந்திய அளவில் ட்ரெண்டிங்காக மாற்றிவிடுவார்கள்.
இந்நிலையில் நடிகர் அஜித் வாக்களிக்க சென்ற நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நிலையில், தளபதி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திருவான்மியூர் தொகுதியில் வாக்களிக்க வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு முன்னரே தனது மனைவி ஷாலினியுடன், நடிகர் அஜித் திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு சென்றார். அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்ணடதால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முயன்றனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.
இதனிடையே வாக்களிக்க சென்ற போது நடிகர் அஜித் அணிந்திருந்த முகக்கவசத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.கறுப்பு மற்றும் சிகப்பு நிற முகக்கவசத்தை அணிந்து, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு சிம்பாலிக்காக கூறியுள்ளார் என சர்சையை கிளப்பியுள்ளனர். இதற்கு தல ரசிகர்கள் எதிர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் ஊழல், விவசாய பிரச்சனை, இந்தி மொழித் திணிப்பு உள்ளிட்ட மக்கள் விரோத விவகாரம் குறித்து கருத்து கூறுவார்கள். ஆனால் தல அஜித் இதுபோன்று எந்தக் கருத்தும் கூறுவது கிடையாது. இந்த நிலையில் அவர், அணிந்திருந்த முகக்கவசம் பேசும் பெருளாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தல-தளபதி ரசிகர்களிடையே கேங்க் வார் ஏற்பட்டுள்ளது.