`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்!
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு. இந்த தேர்தலில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் இருந்தவர், இன்று மதுரை தெற்கு தொகுதியில் உள்ள மீனாட்சி கல்லூரியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்குச் செலுத்துவதற்காக தனது மனைவியுடன் வந்தார். அப்போது நடைமுறைகள் படி அவர் வாக்கு செலுத்தினார். ஆனால் விவிபாட் மிஷினில் அவர் பதிவு செய்த வாக்கிற்கான சிலிப் காண்பிக்கவில்லை.
இதனால் அப்செட் ஆன அமைச்சர் செல்லூர் ராஜு இதை பூத் அதிகாரிகளிடத்தில் முறையிட்டார். அதன்படி அதிகாரிகள் வந்து இயந்திரத்தை சரிபார்த்தனர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் வரை செல்லூர் ராஜு வாக்குச் சாவடியில் அமர்ந்தார். பின்னர் அதிகாரிகள் இயந்திரத்தை சரிபார்க்க அதன்பின் மீண்டும் தனது வாக்கினை செலுத்திவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, செல்லூர் ராஜுவின் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் மக்களில் சிலருக்கு மட்டும் வாக்களிக்க பணம் வழங்கியதாகவும், பலருக்கு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதி கட்சி நிர்வாகியை கண்டித்து போராட்டம் நடத்தினர். இப்படி அமைச்சர் செல்லூர் ராஜூவை சுற்றி இன்று நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன.