சிறையில் இருந்து தப்பிய 1,800 கைதிகள்... காத்திருக்கும் ஆபத்து!
நைஜீரியாவில் அரசை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறன்றனர். இந்நிலையில் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள காவல் நிலையம், ராணுவ கட்டிடங்கள் மற்றும் சிறைச் சாலையை குறி வைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய கிளர்சியாளர்கள் ஒரே நேரத்தில் பல அரசு கட்டிடங்களுக்குள் புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரியவந்துள்ளது. இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு சொத்துக்கள் சேதமாகியுள்ளன.
இதனிடையே, சிறையில் நடத்திய தாக்குதலை பயன்படுத்தி 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த, நைஜீரிய சிறைச்சாலையின் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் ஏனோபர், தாக்குதல் நடத்தியவர்கள் கனகர ஆயுதங்களுடன் வந்தனர் என்றும்,. எந்திர துப்பாக்கி முதல் ராக்கெட் செலுத்தும் கையெறி குண்டுகள் வரை அனைத்தையும் வைத்திருந்தனர் என கூறியுள்ளார்.
அவர்கள் காவல்துறை தலைமையகத்தில் அமைந்துள்ள ஆயுத கிடங்கை கைப்பற்றி, ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்காக தாக்குதல் நடத்தி உள்ளனர் என்றும்,. ஆனால் அது முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், சிறையில் இருந்து தப்பிய கைதிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்சிஸ் ஏனோபர் தெரிவித்துள்ளார்.