தமிழகத்தில் 71.79% வாக்குகள் வாக்குப்பதிவு!
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலை 6 மணி முதலே வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன், தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். காலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு, நண்பகலில் கடும் வெயில் காரணமாக வாக்காளர்கள் வரத்து குறைந்து காணப்பட்டது. பின்னர் வெயில் தாழ்ந்ததும் பழையபடி வாக்குப்பதிவு விருவிருப்பாக நடைபெற்றது.
காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 நிலவரப்படி 26.29% வாக்குகளாக அதிகரித்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமாக இருந்தது. மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமாக உயர்ந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை முத்ல மதியம் 3 மணியில் இருந்து 5 மணி வரை 10.25 சதவீத வாக்குகள் பதிவாகின. மற்ற நேரங்களில் சராசரியாக 13 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. சில இடங்களில் வாக்கு எந்திரம் பழுது, மின்னணு எந்திரம் உடைப்பு, வாக்கு நிறுத்தி வைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
ஆனால், வாக்குப்பதிவு முழுவதும் நிறுத்துவதற்கான எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மாலை 6 மணிக்குப்பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சரியாக 7 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் தோரயமாக காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை தோராயமாக 71.79% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.