கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஓரினச்சேர்க்கை திருமணம்தான் காரணம்! - யார் சொன்னது தெரியுமா?
கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து பலரும் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதியின் விளக்கம் உலகையே உலுக்கியுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து கொரோனா பரவியதாக செய்திகள் வலம் வந்தன. உண்மையில் அங்கிருந்து பரவியதா என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஸ்காட்லாந்தின் ஷெட்லாந்து தொகுதியில் நடைபெறும் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் பீட்டர் டெய்ட் என்ற அரசியல்வாதியிடம், உள்ளூர் பத்திரிகையான The Shetland Times நேர்காணல் ஒன்றை நடத்தியது. அப்போது பேசிய பீட்டர் டெய்ட், ஓர் பாலினத்தவர்களிடையே நடைபெறும் திருமணங்கள் காரணமாக கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என கூறி பத்திரிகையாளரை அதிரவைத்தார்.மேலும் பேசிய அவர், ``கடவுள் விரும்பும் விஷயங்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். நான் கூறும் கருத்துக்கள் எனது மத நம்பிக்கைகளின் அடிப்படையிலானது என்றார்.
அதுமட்டுமல்லாமல், அவர் தொடர்ந்து பேசுகையில், ``ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தை நான் ஆதரிக்கவில்லை, நடைபெறும் தேர்தலில் நான் இதற்கு எதிராக போராடுவேன். கொரோனா வைரஸ் பரவல் கூட ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தால் தான் ஏற்பட்டிருக்கும் . இப்படி கருத்து கூறுவதால் தனக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதையும் நான் உணர்ந்தே இருக்கிறேன்” என்றார்.பீட்டர் டெய்ட்டின் கருட்துக்கள் குறித்து LGBTQ உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், இப்படி ஒரு பார்வையை கொண்டிருக்கும் அவர், உண்மையில் ஒரு மடையர் என குறிப்பிட்டு, அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.