தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தன.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவே வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில் 234 தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.

அதன்படி,

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 83.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

வாக்குகள் அதிகம் பதிவான 5 தொகுதிகள்:

பாலக்கோடு - 87.33 சதவீதம்

குளித்தலை - 86.15 சதவீதம்

எடப்பாடி - 85.6 சதவீதம்

அரியலூர் - 84.58 சதவீதம்

கிருஷ்ணராயபுரம் - 84.14 சதவீதம்

முதலமைச்சர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீதம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீதம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடியில் 73.65 சதவீதம்

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீதம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டியில் 67.43 சதவீதம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என அவர் தெரிவித்தார்.

More News >>