நடிகை ராஷ்மிகாவின் முன்னாள் பாய் ஃப்ரெண்ட் வெளியிட்ட வீடியோ வைரல்
தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் கன்னட பிரபல நடிகை ராஷ்மிகா.
முதன் முதலில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு தமிழ் ரசிகர்கள் பட்டாலம் ஏராளம்.
நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 5 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருடைய பிறந்தநாள் அன்று ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் பாய் ஃபிரெண்ட் ரக்ஷித் ஷெட்டி, இதுவரை யாரும் பார்த்திராத ராஷ்மிகாவின் ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார்.
ரக்ஷித் ஷெட்டி கிரிக் பார்ட்டி படத்தின் ஹீரோ. இவரும் ராஷ்மிகா மந்தனா காதலித்தனர். 2017-ல் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், விரைவிலேயே இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலை முறித்துக்கொண்டனர். இருவரும் பிரிந்துவிட்டாலும் இருவருக்கும் இடையே நல்ல நட்புடன் நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், ரக்ஷித் ஷெட்டி, ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளில் அவர் கிரிக் பார்ட்டி படத்துக்கு எடுத்த ஆடிஷன் வீடியோவை வெளியிட்டு, “கிரிக் பார்ட்டி ஆடிஷனின்போது உன்னுடைய அழகான நினைவுகளில் இருந்து பகிர்ந்துகொள்கிறேன். அப்போதில் இருந்து உன்னுடைய கனவுகளை நிஜமாக்க ஒரு உண்மையான வீராங்கணையாக பயணம் செய்து வருகிறாய். பெண்ணே உன்னை நினைத்து பெருமயாக இருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துகள்… மேலும் உன்னை வெற்றிகள் வந்து சேரட்டும்.” என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வீடியோவுக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, “எனக்கு ரொம்ப தெளிவாக நினைவிருக்கிறது. மிகவும் நன்றி ரக்ஷித் ஷெட்டி.. இது நிறைய பொருள் பொதிந்தது” என்று பதிவிட்டு அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவின் ஆடிஷன் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.