பிறந்தது இரட்டைக் குழந்தை – ஒன்று முழுமாதம் மற்றொன்று குறைமாதம்
இங்கிலாந்தில் பெண் ஒருவர் வெவ்வேறு கால இடைவேளியில் கருத்தரித்து இரட்டை குழந்தை பெற்றெடுத்த நிகழ்வு மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் பாத் நகரைச் சேர்ந்த ரெபேக்கா ராபர்ட்ஸ். சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரெபேக்கா தனது கணவருடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, சில நாட்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாகி உள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், மீண்டும் கர்ப்பமான நிகழ்வு மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து அவர் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இவர்கள் இரட்டையர்கள் என்றாலும் மூன்று வார இடைவெளியில் கருத்தரிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ உலகினை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த நிகழ்வினை சூப்பர்ஃபெட்டேஷன் என்று அழைக்கின்றனர். இதற்கிடையே ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர்.
ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்குக் காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான். இதனால் ரோசாலி 95 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண் குழந்தை நோவாக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் அந்த குழந்தையும் மூன்று வாரங்கள் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.