11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை
இலங்கையில் 11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டவழிவகை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில், பட்டியலிடப்பட்டுள்ள அமைப்புகளை தடை செய்ய, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இதற்கான அனுமதியை வழங்கியதாக, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தவ்ஹீத் ஜமாத், சிலோன் தவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாத், ஜம்யதுல் அன்சாரி சுன்னதுல் மொஹொமதியா, தாருல் அதர் எட் ஜம் உப் ஆதர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவ சங்கம், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கைடா, சேவ் த பர்ல்ஸ் மற்றும் சுபர் முஸ்லிம் ஆகிய அமைப்புக்களுக்கே தடை விதிக்க அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்தை அடியோடு இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் செயற்படும் ஜனநாயக ரீதியான தமது அமைப்பை தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இனவாத கொள்கைகளை கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புக்களும் இந்த பட்டியலில் காணப்பட்ட போதிலும், அந்த இனவாத அமைப்புகளை தடை செய்யாது, இஸ்லாமிய அமைப்புகளை மாத்திரம் தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் தெரிவித்துள்ளார்.