தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு? – பிரதமர் மோடி இன்று ஆலோசனை

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு முதல் அலையைவிட, இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. பின்னர் 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. மூன்று நாட்களில் இரண்டு முறை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா பரவலை தடுப்பதற்கு சில புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்றும், பொதுமக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வைப்பது, கொரோன தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அறிவுறுத்தப்படலாம் என தெரிகிறது

More News >>