“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து!
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உச்சமடைந்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 59 ஆயிரத்து 907 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், 322 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு காரணம் மக்கள் தொகை நெருக்கடியே காரணம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,15,736 பேருக்கு நேற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இது ஒரு நாளில் மிக அதிக அளவாகும். இந்த உயர்வால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 28 லட்சத்து ஆயிரத்து 785 ஆக உள்ளது. ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்வடைந்து உள்ளது.
மகாராஷ்டிராவில் பன்வெல் மாநகராட்சி கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளன. பன்வெலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளானது, தடுப்பூசி பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்ட பின்னர் மையங்கள் திறக்கப்படும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை. தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியுள்ளது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். சில மாநில அரசுகள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக, மக்களிடம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வருகின்றன என்றும் ஹர்சவர்தன் குற்றம்சாட்டியுள்ளார்.