தெலங்கானாவில் பலத்தை இழந்த தெலுங்கு தேசம் கட்சி

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு, அண்டை மாநிலமான தெலங்கானாவில் மெச்சா நாகேஸ்வர் ராவ் மற்றும் சந்திரா வெங்கட வீரைய்யா என்ற இரண்டு எம்.எல்.ஏக்கள் இருந்து வந்தனர். தற்போது, அந்த எம்.எல்.ஏக்கள் இருவருமே அக்கட்சியில் இருந்து விலகி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரின், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்து, அக்கட்சியின் சட்டமன்ற குழுவில் இணைந்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து 2 எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்திருப்பதால் அந்த கட்சியின் சட்ட்மன்ற பலம் 103 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் ஏற்கனவே தனது பலத்தை இழந்த தெலுங்கு தேசம் கட்சி, 2018ம் ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களை மட்டுமே பெற்றது. கம்மம் மாவட்டத்தில் உள்ள அஸ்வரோபேட்டா மற்றும் சத்துப்பள்ளி ஆகிய இரண்டு தொகுதிகளில் வென்றிருந்த எம்.எல்.ஏக்கள் இருவரும் தற்போது அக்கட்சியில் இருந்து விலகி தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்துள்ளனர்.

தெலங்கானாவில் களத்தை இழந்த தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களுமே அதில் இருந்து விலகி ஆளும் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்திருப்பது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>