“கடவுளே தலைவர் ரஜினிகாந்தை காப்பாற்று”

சிறுத்தை சிவா அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முன்னணி நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். ஹைதரபாத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோஸில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த படப்பிடிப்பு குழு முடிவு செய்துள்ளது.

இதையடுத்த படப்பிடிப்பில் தற்கோது கலந்துகொள்ள இயலுமான என நடிகர் ரஜினியிடம் படக்குழு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து ரஜினி இன்று காலை தனி விமானம் மூலம் ஹைதராபாத் கிளம்பிச் சென்றார். விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நேரத்தில் ரஜினி ஹைதராபாத் கிளம்பிச் சென்றிருப்பது ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.

“கடவுளே, தலைவர் ரஜினிகாந்த் நல்லபடியாக நடித்துவிட்டு ஊர் திரும்ப வேண்டும்” என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதை தெரிந்தும் ரஜினி ஏன் இப்படி ரிஸ்க் எடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்று திரைத்துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.

More News >>