திரையரங்கில் 50% இருக்கை திருவிழாக்களுக்கு தடை.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாள்தோறும் கொரோனா பாதிப்புகளின் உயர்வு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைப்போல இல்லாமல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால்,இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது.
தமிழகத்திலும் மீண்டும் கொரோனா தலை தூக்கி வருகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் 3000-க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் 4000-ஐ தாண்டி கொரோனா பாதிப்புகள் பதிவானது. இதையடுத்து தமிழக அரசு தற்போது கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கட்டுப்பாடுகள் என்னென்ன?
* ஏப்.10ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி
* கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
* கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை
* மாவட்டங்களில் உள்ள மொத்த வியபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியபார கடைகளுக்கு தடை
* மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி.
* பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.