`அது ஒரு மிகப்பெரிய விஷயம் – தோனியின் ஆலோசனை குறித்து நடராஜன்!
தோனி தனக்கு வழங்கிய ஆலோசனை குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழக வீரர் நடராஜன் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தவர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணியில் பங்கேற்ற பின் அவரின் திறமையானது பல மடங்கு உயர்ந்தது. தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.
கடந்த ஐ.பி.எல் போட்டியின்போது அவர் சன்ரைஸஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். அந்த ஐ.பி.எல் தொடரில் 71 யார்க்கர் பந்துகளை வீசி அசத்தினார். இந்நிலையில் அவர் அந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனக்கு வழங்கிய ஆலோசனைகள் குறித்து நினைவுகூர்ந்துள்ளார். எம்எஸ் டோனி குறித்து டி நடராஜன் நினைவு கூர்ந்து கூறுகையில் எம்எஸ் டோனி போன்ற ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அது எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.
டோனி என்னிடம் பிட்னஸ் பற்றி பேசினார். என்னை ஊக்கப்படுத்தினார். நான் அனுபவத்துடன் மிகச் சிறப்பாக வருவேன் என்றார். மேலும் அவர் என்னிடம் ஸ்லோ பவுன்சர், கட்டர்ஸ் மற்றும் பந்துகளில் வித்தியாசம் ஆகியவற்றை பயன்படுத்தும்படி கூறினார். அவருடைய அந்த ஆலோசனை எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது என நடராஜன் அந்த நிகழ்வை நினைவுகூர்ந்துள்ளார்.
ஐபிஎல் 2021 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 11-ந்தேதி சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.