என்ன நடந்தாலும் விடமாட்டோம் – சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த தைவான்!
சீனா தனது அண்டை நாடுகளுடன் ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. அண்டை நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர துடித்துகொண்டிருக்கிறது. இதன்காரணமாக அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. ஆங்காங் நாட்டை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அதேபோல் தென் சீன கடல் பகுதியில் முழு ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் தென் சீன கடலில் ராணுவ கட்டமைப்புகளை பெருமளவில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளது. `தைவான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது ராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த பேச்சு தைவானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து வரும், அமெரிக்கா, தைவானுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது. மேலும் தைவானுடன் அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவின் இந்த செயல்பாடு சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா, எங்களை தாக்கினால் கடைசி வரை விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து தைவான் வெளியுறவு மந்திரி ஜோசப் வூ பேசுகையில், ``நாங்கள், எங்களை தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை.
நாங்கள் போரில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவோம். தேவைப்பட்டால் எங்களை தற்காத்து கொள்ள கடைசி நாள் வரை போராடுவோம்.தைவானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீனா அங்கீகரிக்கவில்லை என்றார்.