இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு கெளரவம்- சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமிக்கு இந்திய அரசு சிறப்பு அஞ்சல் தலையை வெளியீட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி. இவர் சமீபத்தில்தான் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை சாய்தார்.
இந்தச் சாதனையை மகளிர் கிரிக்கெட்டில் முதன்முறையாக நிகழ்த்தும் நபரும் இவரே. இதைச் சிறப்பிக்கும் வகையில், இந்திய அரசு, இவருக்கு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
2002-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் கோஸ்வாமி, இதுவரை 169 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 203 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவரின் மிரளவைக்கும் பௌலிங் சராசரி 21.77 ஆகும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com