ஏன் கற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தெரியுமா?? வாங்க தெரிந்துகொள்வோம்..
கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து உள்ளன. கற்றாழை ஜெல்லை காயங்களுக்கு மேற்பூச்சாக பயன்படுத்த முடியும். இது நம் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. இந்த சாற்றை உட்கொள்ள முயலுங்கள். இது உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்கும்.
ஊட்டச்சத்தின் பங்கு:-இதில் கலோரிகள் மிகக் குறைவு. கற்றாழையை வெறும் வயிற்றில் தவறாமல் உட்கொள்வது குறைபாடுகளில் இருந்து உங்களை விலக்கி வைக்க உதவி செய்யும். இது பல்வேறு விதமான நோய்களை தடுக்க உதவுகிறது. இதில் கால்சியம், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளன.
சரும அழகுக்கு உதவுமா?இது உங்க சருமத்திற்கு மென்மையான தன்மையை அளிக்கிறது. முன்கூட்டியே நரைக்கப்படுவதை தடுக்கிறது. கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் இதில் அதிகம் உள்ளன. இதனால் உங்கள் சருமம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது.
செரிமானம் பிரச்சனையா?கற்றாழை சாற்றில் செரிமானத்திற்கான பல நொதிகள் உள்ளன. இது மலச்சிக்கல், விட்டமின் குறைபாடுகள் போன்ற பிற மருத்துவ சிக்கல்களை போக்க உதவுகிறது. இது போன்ற பல நன்மைகள் கற்றாழை ஜூஸில் நிறைந்துள்ளது. தினமும் குடித்து பயன்பெறுங்கள்..