அடுத்த ஆண்டு சிஎஸ்கேவுக்கு மாற்று கேப்டனா?... சி.இ.ஓவா காசி விஸ்வநாதன் சொன்னது என்ன?!
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடியது. இதனால் கேப்டன் தோனி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார் என்றும் விளையாட கூடாது என்றும் குரல்கள் வந்தன. ஆனால், ``இந்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியையும் தோனியே வழிநடத்துவார் என்பதில் முழு நம்பிக்கையுடன் உள்ளேன்.
அவர் சென்னை அணிக்காக மூன்று சாம்பியன் பட்டத்தை வென்று அளித்தவர். கடந்த வருடம் மோசமானதாக அமைந்துவிட்டதுதான். அதற்காக அத்தனையையும் மாதிரியே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ஆனாலும் தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த வருடமே தோனிக்கு கடைசி ஆண்டு என்று பேசினர்.
இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் மீண்டும் இது தொடர்பாக பேசியுள்ளார். ``எனக்கு தெரிந்து தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவருடைய அதிகாரபூர்வ கருத்து கிடையாது. எனினும் நாங்கள் இதுவரை மாற்று கேப்டன் என யாரையும் பரிசீலிக்கவில்லை” என கூறியிருக்கிறார்.
நாளை 2021 ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை அணியை வழிநடத்த ஆயத்தமாகி வருகிறார் தோனி. சென்னை அணி வரும் 10ஆம் தேதியன்று டெல்லி அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.