இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
உண்மையான நம் பாரம்பரிய சத்து மாவு தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம். இந்த மாவுதான் குழந்தைகளுக்கு உண்மையான ஆரோக்கியத்தை கொடுக்கும். இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.
தேவையான பொருள்கள்:-ராகி- 2 கிலோசோளம்- 2 கிலோநாட்டு கம்பு- 2 கிலோபாசிப்பயறு- 1/2 கிலோகொள்ளு - 1/2 கிலோமக்காசோளம்- 2 கிலோபொட்டுக்கடலை- 1 கிலோசோயா -1 கிலோதினை - 1/2 கிலோகருப்பு உளுந்து -1/2 கிலோசம்பா கோதுமை-1/2 கிலோபார்லி- 1/2 கிலோநிலக்கடலை - 1/2 கிலோமாப்பிள்ளை சம்பா அவல்- 1/2 கிலோஜவ்வரிசி-1/2 கிலோவெள்ளை எள்- 100 கிராம்கசகசா- 50 கிராம்ஏலம்- 50 கிராம்முந்திரி- 50 கிராம்சாரப்பருப்பு- 50 கிராம்பாதாம் -50 கிராம்ஓமம் -50 கிராம்சுக்கு -50 கிராம்பிஸ்தா- 50 கிராம்ஜாதிக்காய்- 2மாசிக்காய்- 2
செய்முறை:-ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும்.
அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டினால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு ரெடி.