மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வடகொரிய விவகாரம்hellip ட்ரம்ப் காட்டம்!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய விவகாரம் குறித்து பலர் தான்தோன்றித்தனமாக கருத்துக் கூறுவதை காட்டத்துடன் விமர்சித்துள்ளார்.
வடகொரியாவின் அபரிமிதமான அணு ஆயுதச் சோதனைகளால், அமெரிக்காவுக்கும் அந்நாட்டுக்கும் நேரடிப் போர் வெடிக்கக் கூடும் என்று சில மாதங்கள் முன்பு வரை அஞ்சப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், `அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்திவிட்டு, அமைதிப் பாதையில் செல்ல விரும்புகிறோம்’ என்று பகிரங்க அறிவிப்பு வெளியிட்டார். அடுத்த மாத இறுதிக்குள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டிருப்பதாக கிம் கூறினார்.
இதை அனைத்தையும் டர்ம்ப்பும் ஆமோதித்து, `கிம் உடனான சந்திப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்’ என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்க ஊடகங்களில் சில, `வடகொரிய விஷயத்தில் அமெரிக்காவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது’ என்பது போன்ற செய்திகளை வெளியிட்டன.
இதனால் கடுப்பான ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், `வடகொரியாவுடன் ஒரு சுமூகப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லத் தெரியாத மேதாவிகள் இன்று எனக்கு எப்படிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்று பாடம் எடுக்கின்றனர்.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக வடகொரியா அணு ஆயுதச் சோதனைகள் இனி இல்லை என்று அறிவித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்’ என்று காட்டமாக ட்வீட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com