திரைக்கு வந்துடாரு “கர்ணன்” – “படம் வேற லெவல்”

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “கர்ணன்”.

தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர்.

கர்ணன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள், டீசர், என படம் தொடர்பான அனைத்து செய்திகளும் டிரெண்டிங் ஆகின.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. அண்மையில் வெளியான “பண்டாரத்தி புராணம்” பாடல் சர்ச்சை நீதிமன்றம் வரை சென்றதால், “மஞ்சனத்தி” பாடல் என பெயர் மாற்றம் செய்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

“கர்ணன்” படம் எப்போது வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகள் இடிபோல் விழுந்தது. இதனால் படம் வெளியாகுமா என அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது.

இதனிடையே “கர்ணன்” படம் திரையரங்கில்தான் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.

சென்னையில் இன்று காலை 6 மணிக்கே ஒரு சில திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்பட்டது.

ரசிகர்கள் படம் பார்த்துக்கொண்டே ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

“கர்ணன்” படத்தை பார்த்த நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில்:- முதல் பாதி முடிந்துவிட்டது . மிகவும் இன்ட்ரஸ்டிங்காக சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக குதிரை யானை கழுதை ஆகியவற்றை வைத்து செம கருத்து கூறியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். தனுஷ் மிகவும் மாஸ் ஆக நடித்து உள்ளார் .என கூறிய நடிகை ஆர்த்தி இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங் என்றும் பதிவிட்டுள்ளார்.

“கர்ணன்” படத்தை பார்த்த பெரும்பாலானவர்களின் பதிவுகள் அனைத்துமே பாஸிட்டிவ் விமர்சனங்களாக உள்ளன. இதனால், இந்த படம் தனுஷின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என தெரிகிறது.

More News >>